Child Baby Slips Into Borewell: 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது; மீட்பு பணிகள் தீவிரம்..!
ஏப்ரல் 04, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டம், இண்டி தாலுகாவில் உள்ள லச்யானா கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சதீஷ்-பூஜா. இத்தம்பதிக்கு சாத்விக் (வயது 2) என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீஷ் அவர்களின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகே இருக்கின்ற விவசாய நிலத்தில் எலுமிச்சை உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அவருடைய விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று புதியதாக அமைத்துள்ளார். அதில் தண்ணீர் வராததால், அதனை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளார். Japan Earthquake: தைவானைத் தொடர்ந்து ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?.!
இந்நிலையில், விளைநிலம் அருகே வீடும் இருப்பதால், சதீஷ் மகன் சாத்விக் அங்கு சென்று விளையாடி வருவது வழக்கமாகும். நேற்று மாலை, தவழ்ந்து வந்த குழந்தை ஆழ்துளை கிணற்று (Child Has Fallen Into A Borehole) அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்துள்ளது. நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி வந்த நிலையில், குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கிராமத்து மக்களை உதவிக்கு அழைத்துள்ளனர். பின்னர், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த அவர்கள், குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மீட்பு பணிகள் சுமார் 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.