நவம்பர் 05, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலை செய்து அடையாளம் பெற்று பின் நடிகரானார். இவருக்கு முன்னதாகவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதனிடையே, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படம் வெளியான மறுநாள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா தரப்பில் அறிவிக்கப்பட்டது. GP Muthu: நடிகர் ஜிபி முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. நடந்தது என்ன?
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக புகார்:
பின் ஒருகட்டத்தில் ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்துவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதால் தனது மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 பராமரிப்பு தொகை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) மற்றும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
2 வது திருமணத்தை ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்?
இதனை தொடர்ந்து நேற்று ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையின்போது மகளிர் ஆணையத்திடம் நேரில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகி இருந்தார். அப்போது மகளிர் ஆணைய குழுவினர் சார்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், பிறந்த குழந்தை தன்னுடையது தான். நான் இரண்டாவது திருமணம் செய்ததும் உண்மை என அதிகாரிகளிடம் அவர் ஒப்பு கொண்டதாக மகளிர் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக ஜாய் கிரிசில்டாவை தனது இரண்டாவது மனைவியாகவும், இருவருக்கும் பிறந்த குழந்தையை தனது குழந்தை எனவும் அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. மேலும் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்துள்ள குழந்தையை சட்டவிரோதமாக கருத முடியாது என்பதால் அதனை பராமரிக்கும் உரிமையும் ரங்கராஜுக்கு உண்டு என மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது.
பணம் பறிக்கும் நோக்கத்தில் ஜாய் கிரிசில்டா இருப்பதாக அறிக்கை:
இந்த நிலையில் மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
DNA பரிசோதனை எடுத்து நிரூபிக்க வேண்டும்:
கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.