நவம்பர் 04, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலை செய்து அடையாளம் பெற்று பின் நடிகரானார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், திரையுலகில் அடியெடுத்து வைத்த பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவருக்கு முன்னதாகவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். Bigg Boss Tamil 9: பிரவீனின் முகத்தில் குத்திய கம்ருதீன்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட போட்டியாளர்கள்.. பிக் பாஸ் வீட்டிற்குள் கலவரம்.!
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்:
இதனிடையே, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படம் வெளியான மறுநாள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின் ஒருகட்டத்தில் ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்துவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் புகார் அளித்தார்.
ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது:
இதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதால் தனது மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 பராமரிப்பு தொகை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) மற்றும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
2 வது திருமணத்தை ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்:
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையின்போது மகளிர் ஆணையத்திடம் நேரில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகி இருந்தார். அப்போது மகளிர் ஆணைய குழுவினர் சார்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், பிறந்த குழந்தை தன்னுடையது தான். நான் இரண்டாவது திருமணம் செய்ததும் உண்மை என அதிகாரிகளிடம் அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதன் வாயிலாக ஜாய் கிரிசில்டாவை தனது இரண்டாவது மனைவியாகவும், இருவருக்கும் பிறந்த குழந்தையை தனது குழந்தை எனவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்துள்ள குழந்தையை சட்டவிரோதமாக கருத முடியாது என்பதால் அதனை பராமரிக்கும் உரிமையும் ரங்கராஜுக்கு உண்டு என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.