Couple Dies By Suicide: கடன் வாங்கி மனைவியை பாதுகாத்த கணவர்; கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால், தம்பதி ஜோடியாக தற்கொலை..!

மகாராஷ்டிராவில் கடன் பிரச்சனை காரணமாக தம்பதி இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Poison Suicide (Photo Credit: Pixabay)

ஜூலை 06, நாக்பூர் (Maharashtra News): கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி ரிஜூ விஜயன் என்கிற விஜய் நாயர் (வயது 42)-பிரியா நாயர் (வயது 40). பிரியா நாயர் மூளை புற்றுநோயால் (Brain Cancer)பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவரது சிகிச்சைக்காக தம்பதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூருக்கு வந்துள்ளனர். அங்கு கஜானன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். TN CM MK Stalin on BSP Armstrong Killed: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.!

இந்நிலையில், தனது மனைவி பிரியாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு வாரமும் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும் என்பதால், விஜய் பலரிடம் கடன் வாங்கி வந்துள்ளார். வாங்கிய கடனை ஜூலை 01-ஆம் தேதி அன்று செலுத்த வேண்டிய கட்டாயத்தில் விஜய் சிக்கிக் கொண்டார். இவரால், கடனை (Debt Problem) குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பி செலுத்த இயலவில்லை.

இதனால், மிகவும் மனமுடைந்து காணப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து, இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement