Rail Bridge Couple Photoshoot Tragedy: இரயில்வே தண்டவாளத்தில் போட்டோசூட்; 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமணத்தம்பதி.. நடந்த விபரீதம்.!

தம்பதிகள் ஆபத்தான வகையில், இரயில்வே பாலத்தின் மீது போட்டோசூட் நடத்தியபோது குறுக்கே இரயில் வந்ததால் இருவரும் ஒருசேர 90 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.

Couple Jump on 90 Feet Ditch (Photo Credit: @SachinGuptaUP X)

ஜூலை 15, பாளி (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாளி மாவட்டத்தில், பழமைவாய்ந்த இரயில்வே பாதை உள்ளது. இந்த பழமையான இருப்புப்பாதை, மீட்டர் அளவிலான இரயில்வே வழித்தடம் என்பதால், அங்குள்ள பிரபலமான இடமாக கருதப்படுகிறது. மேலும், அங்குள்ள (Railway Heritage Bridge Couple Photoshoot Fall into 90 feet Valley) இரயில்வே பாலம் ஒன்றும் பழமையான தூண்கள் கொண்ட பகுதி ஆகும். சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், அப்பகுதிக்கு சென்று இரயில் பயணிக்கும்போது அதன் அழகை கண்டு ரசிப்பது வழக்கம்.

கௌசிக் பாணியில் சம்பவம் செய்த இரயில்:

இந்நிலையில், சம்பவத்தன்று இதே மாவட்டத்தில் உள்ள பகிடி நகர், கலால் கி பிபலியான் பகுதியை சேர்ந்த இளம் புதுமண ஜோடி ஒன்று, தங்களின் இருசக்கர வாகனத்தில் கோரம்காட் பகுதியில் உள்ள மேற்கூறிய பாலத்திற்கு சென்றுள்ளது. பாலத்தில் நின்றபடி இருவரும் புகைப்படம் எடுக்க முயற்சித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, இரயில் திடீரென அவ்வழித்தடத்தில் வந்துள்ளது. Trump Rally Shooting: வேலையை காண்பித்த சீன நிறுவனங்கள்; ட்ரம்ப் தாக்குதல் தொடர்பான டீ-சர்ட் விற்பனை அமோகம்.! 

90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி:

இதனை சற்றும் எதிர்பாராத தம்பதி செய்வதறியாது திகைத்த நிலையில், பதற்றத்தில் பாலத்தில் இருந்து 90 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குதித்துள்ளது. இரயில் ஓட்டுநர் இரயிலை முன்னதாகவே நிறுத்த முயற்சித்தபோதிலும், தம்பதிக்கு மிக அருகில் சென்று இரயில் நின்றது. இதற்குள் இரயில் மோதி தாங்கள் பலியாகிவிடுவோம் என நினைத்த தம்பதி, 90 அடி பள்ளத்தில் குதித்து இருக்கிறது.

குடும்பத்தினர் சோகம்:

இந்த சம்பவத்தில் பெண்மணி கால் எலும்புகள் உடைந்து பாதிக்கப்பட்ட நிலையில், அவரின் கணவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அவர் ஆபத்தான நிலையை கடந்துவிட்டாலும், சற்று கவலைக்கிடமான வகையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இருதரப்பு குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்துகையில், புதுமணத்தம்பதிகள் ராகுல் மேவடா (22), ஜான்வி (20) என்பது தெரியவந்தது. இருவரும் பாலத்தில் நின்றவது போட்டோ சூட் எடுக்க முயற்சித்து விபரீதத்தில் சிக்கிக்கொண்டது உறுதியானது. இந்த சம்பவத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement