ஜூலை 15, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது, பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை (Trump Rally Shooting) பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த விசயத்திற்கு ஜனநாயக கட்சி சார்பில், அமெரிக்கா அதிபருக்கான போட்டியில் களமிறங்கியுள்ள வேட்பாளர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தனது நண்பரான ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்து இருந்தார். 3 Year Old Boy Killed: குடும்பச்சண்டையில் 3 வயது சிறுவன் குளத்தில் வீசி கொடூர கொலை; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
"போராடுங்கள்" என கொக்கரித்த ட்ரம்ப்:
உள்ளூர் நேரப்படி, தனது சிகிச்சைகள் அனைத்தும் நிறைவுபெற்று தாக்குதல் சம்பவம் குறித்து ட்ரம்ப் தனது கருத்தை தெரிவித்தார். மேலும், தனது உயிரை காப்பாற்றிய அமெரிக்க உளவுத்துறைக்கு நன்றி தெரிவித்து இருந்தார். காதுகளில் குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்தபோதிலும், ட்ரம்ப் "போராடுங்கள்" என முழக்கமிட்டவாறு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அமெரிக்க அளவில் மட்டுமல்லாது உலகளவிலும் கவனிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று இரவு 08:30 மணியில் இருந்து சீன விற்பனை இணையதளமான டாபோவில் (Taobao) ட்ரம்பின் உருவம் பொரித்த டீ-சர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
வரவேற்பை பெற்ற டீ-சர்ட் விற்பனை:
அந்த டீ-சர்ட்டுகள் அனைத்தும் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, அவர் கைகளை உயர்த்தி போராடுங்கள் என கூறியது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீ-சர்ட் விற்பனை தொடங்கிய சிலமணிநேரத்தில் முதற்கட்டமாக 2,000 ஆர்டர்களையும் பெற்றுள்ளன. டிஜிட்டல் உலகில் உலகின் ஒரு பகுதியில் நடந்த பிரச்சனையை உடனடியாக அச்சடித்து விளம்பரப்படுத்திய நபரின் செயல், தற்போது உலகளாவிய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. சம்பந்தப்பட்டவரின் வியாபார யுக்தியும் கவனத்தை ஈர்த்துள்ளது.
as i said. https://t.co/4iDlbHIDF7 pic.twitter.com/aaVyO5Mx8P
— Dietz (@ThaDietz_) July 14, 2024