Fake Doctor Arrested: மருத்துவம் படிக்காமலேயே வைத்தியம்: 50 வயது போலி மருத்துவரை தட்டிதூக்கிய மும்பை காவல்துறை.!

ஆனால், சில போலியான மருத்துவர்களால் உயிரே கேள்விக்குறியாகும் சூழலும் உள்ளன.

Fake Doctor Runned Clinic (Photo Credit: @ANI X)

நவம்பர் 20, கோவண்டி (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கோவண்டி (Govandi, Mumbai), சிவாஜி நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வருபவர் அல்டாப் ஹுசைன் கான் (வயது 50). இவர் மருத்துவம் பயிலாமலேயே அனுபவத்தின் பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தனது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த ஹுசைன், வேலையாட்களையும் நியமித்து மருத்துவப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த புகார் அடிப்படையில், நேற்று அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. Leo at Netflix Platform: விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நெட்பிளிக்ஸ்: லியோ வெளியீடு தேதி அறிவிப்பு.! 

விசாரணையில், அவர் மருத்துவம் பயிலாமலேயே மருத்துவம் பார்த்து வந்தது அம்பலமானது. இதற்காக காவல் துறையினர், தலைமை காவலர் ஒருவரை நோயாளி போல மாறுவேடத்தில் அனுப்பி மருத்துவரை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த மருத்துவ உபகரணங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 419, 420ன் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அல்டாப் ஹுசைன் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.