Leo on Netflix (Photo Credit: X)

நவம்பர் 20, சென்னை (Cinema News): கடந்த அக்.19ம் தேதி லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் (Seven Screen Studios) தயாரிப்பில், அனிரூத் இசையில் (Anirudh Ravichandar) வெளியாகி, ரசிகர்களிடம் பேராதரவதை பெற்ற திரைப்படம் லியோ (Leo).

நடிகர்கள் இளையதளபதி விஜய், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம், லோகேஷின் கைதி, விக்ரமின் தொடர்ச்சியாக அமைந்ததால் ஏகபோற வரவேற்பை பெற்றது. Israel Hamas War Death Toll: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 13 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை இழந்த பாலஸ்தீனியர்கள்.. 6 ஆயிரம் பேர் மாயம்.! 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்கவில்லை எனினும், படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்புடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரூ.250 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம், ரூ. 600 கொடிகளை கடந்து வசூல் செய்துள்ளது.

இப்படம் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உலகளவில் வெளியானது. இந்நிலையில், படம் நவம்பர் 24ம் தேதி முதல் இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் (Netflix OTT Platform) ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நவம்பர் 28ம் தேதி முதல் சர்வதேச அளவிலான ரசிகர்களும் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படத்தை காணலாம்.