Traffic Violation In Bengaluru: போக்குவரத்து விதிமீறலால் ரூ. 30.57 லட்சம் அபராதம்.. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!
30.57 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நவம்பர் 13, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) செயலி மூலம் இ - டாக்சி, உணவு வினியோகம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும், போக்குவரத்து விதிகளை (Traffic Rules) மீறி செயல்படுவதாக போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், இவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். Amritsar International Airport: கடும் பனிமூட்டம் - விமான சேவைகள் ரத்து.. பயணிகள் சோகம்.!
இதுகுறித்த விசாரணையில், தடை செய்யப்பட்ட மண்டலங்களுக்குள் அனுமதியின்றி நுழைவது, வாகன நிறுத்தம், ஹெல்மெட் அணியாமல் சவாரி செய்தல், மொபைல் போன் பேசியது, சிக்னல் ஜம்ப், நோ என்ட்ரியில் சென்றது, நடைபாதையில் ஓட்டியது, நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் சுமார் 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், பெங்களூரு போக்குவரத்து காவல்துறை (BTP) போக்குவரத்து விதிகளை மீறியதற்காக (Traffic Violation) இ-காமர்ஸ் டெலிவரி பணியாளர்கள் (Delivery Staff) மீது கிட்டத்தட்ட 6,000 வழக்குகளை பதிவு செய்து, அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதுவரை, அவர்களிடம் இருந்து ரூ. 30.57 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.