A Woman Death: கள்ளத்தொடர்பை மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை – கள்ளக்காதலன் வெறிச்செயல்..!

நீண்ட நாட்களாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அது கொலையிலும் முடிந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Crime File Picture (Photo Credit: Pixabay)

மார்ச் 12. பெங்களூரு (Karnataka News): கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் அருகே உள்ள யரடோனா கிராமத்தில் வசித்து வரும் கிரிஜம்மா (வயது 35). தனது கணவருடன் வாழ பிடிக்காமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் நாயக் (வயது 25). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பழகி உள்ளனர். Minor Girl Pregnancy: 17 வயது சிறுமி கர்ப்பம் – தகாத உறவால் நடந்த விபரீதம்..! இளைஞருக்கு வலைவீச்சு..!!

கள்ளத்தொடர்பு: சில நாட்களாகவே கிரிஜம்மா அவரிடம் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க மறுத்து தேவராஜ், அவரை வற்புறுத்தி தொந்தரவு செய்துவந்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது, கிரிஜம்மா மறுபடியும் மறுத்துள்ளார். உடனே, தேவராஜ் கோவத்தில் கிரிஜம்மாவின் சேலையை கொண்டு அவருடைய கழுத்தை நெரித்து, அருகில் இருந்த கல்லை அவர் தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். உடனடியாக அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த லிங்கசுகுர் காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றினர். மேலும், விசாரணையில் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலைமறைவாகி உள்ள தேவராஜின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement