Yamunotri Massive Rush: கட்டுக்கடங்காமல் யமுனோத்ரி கோவிலுக்கு செல்ல தயாரான பக்தர்கள்; மலைப்பாதை நடுவே கூட்ட நெரிசலால் பக்தர்கள் கடும் அவதி.!
யாத்திரையாக கோவிலுக்கு செல்ல முயன்ற பக்தர்கள் கூட்ட நெரிசலால் மலைப்பாதையில் சிக்கித்தவிக்கும் சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
மே 11, டெஹ்ராடூன் (Uttarakhand News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகியவற்றுடன் யமுனோத்ரி கோவிலுக்கு செல்லும் யாத்திரையும் பிரபலமான ஒன்றாகும். தற்போது அட்சய திருதியை நிகழ்வை தொடர்ந்து, கோவில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. இதனால் ஆபத்தான மலைவழியில் பக்தர்கள் அச்சத்தை கடந்து பயபக்தியுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், யமுனோத்ரி (Yamunotri Rush) கோவிலுக்கு செல்ல முயன்ற பக்தர்கள், மக்கள் வெள்ளத்தின் காரணமாக கூட்டநெரிசல் ஏற்பட்டு மலைப்பகுதியில் கால்கடுக்க கட்டுக்கடங்காத கூட்டத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. Blindman Falls into Elevator Shaft: திறந்து கிடந்த லிப்ட் பாதையில் தவறி விழுந்த பார்வையற்ற நபர்; ஊசலாடும் உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
நிர்வாகத்தின் செயல்பாடுகள் காரணம் என பக்தர்கள் குற்றசாட்டு: இமயமலையில் உள்ள கார்வால் பகுதியில் இருக்கும் யமுனோத்ரி கோவில் நேற்று திறக்கப்பட்ட நிலையில், இன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மலைப்பாதையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவர்கள் காத்திருந்தனர். மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சென்று வருவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த செயலுக்கு காரணம் எனவும் மக்கள் கூறுகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.