மே 11, லாஸ் ஏஞ்சல்ஸ் (World News): அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், குறைந்த வருவாய் கொண்டோர் தங்குவதற்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன. இவற்றில் அங்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள், தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அந்நகர அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தில், தற்போது ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். Rohit Sharma and Abhishek Nayar’s Chat Video: கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளருடன் உரையாடிய ரோஹித் சர்மா; வீடியோ வைரல்..! 

பார்வையற்ற நபருக்கு நேர்ந்த சோகம்: தற்போது அந்த குடியிருப்பு கட்டிடம் மறுசீரமைப்புக்காக காத்திருக்கிறது. கட்டுமானங்கள் வலுவிழந்து காணப்படுவதால் மக்களும் அச்சமான சூழ்நிலையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கட்டிடத்தின் லிப்ட் கதவு திறந்து கிடந்த நிலையில், அதற்குள் பார்வை பாதிப்பு உடைய நபர் தவறி விழுந்தார். இதனால் அவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 4 வது மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். Gold Smuggling: 2 நாட்களில் ரூ.7 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி.! 

உயிர்பயத்துடன் வாழும் மக்கள்: இந்த விஷயம் தொடர்பாக குடியிருப்பு வாசிகள் கூறுகையில், "இந்த கட்டிடம் வலுவிழந்துவிட்டது. கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். நகரின் வீதிகளில் உறங்குவதை காட்டிலும், இங்கு மனித அச்சுறுத்தல் இன்றி வாழுகிறோம் எனினும், எப்போதும் பேராபத்து ஏற்படலாம் என்ற சூழலில் வாழ்ந்து வருகிறோம்" என கூறினர். பார்வையற்ற நபர் விழுந்த லிப்ட் பராமரிப்புக்காக கடந்த 2018ம் ஆண்டு 6 இலட்சம் அமெரிக்க டாலர் தொகை செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.