Youths Atrocity in Char Dham Yatra (Photo Credit: @SachinGuptaUP X).jpeg

மே 15, ருத்ரப்ரயட் (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் தற்போது சார் தாம் யாத்திரை (Char Dham Yatra) தொடங்கி இருப்பதால், கேதார்நாத், யமுனோத்ரி உட்பட பல்வேறு புனித தலங்களுக்கு மக்கள் திரளாக சென்று வருகின்றனர். தங்களின் ஊரில் இருந்து ஒரே குழுவாகவும் அவர்கள் பயணித்து சாமி தரிசனத்தை செய்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழு, உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரப்ரயட், சொன்பிரயக் பகுதிக்கு சென்றுள்ளது. Bus - Lorry Collision Fire Accident: தனியார் பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. பேருந்து தீப்பிடித்து 5 பயணிகள் உடல் கருகி பலி..! 

ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் சிக்கிய கும்பல்: அங்கு தங்களின் வாகனம் மீது ஏறி அமர்ந்து இருந்த கும்பல், மதுபானத்தை ஊற்றி பொதுவெளியில் அருந்தி மகிழ்ந்து இருக்கிறது. அச்சமயம் கண்காணிப்பு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் இளைஞர்கள் குழுவை கண்டு விசாரணை செய்துள்ளது. இதனால் மிரண்டுபோன இளைஞர்கள் பதற்றத்துடன் தங்களின் பதிலை முன்வைக்க, காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். மேலும், பொதுவெளியில் இவ்வாறான செயல்களை செய்வது தண்டனைக்குரியது என அறிவுரையும் வழங்கப்பட்டது.

காவல்நிலையத்தில் மன்னிப்பு வீடியோ: அதனைத்தொடர்ந்து, இளைஞர்கள் குழு காவல் நிலையத்தில் இருந்தவாறு தங்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளது. விசாரணையில், முதலில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்டித்த செயலுக்கு இளைஞர்கள் குழு மிரட்டும் தோனியில் பேச, அதன்பின் அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரித்துள்ளனர் என்பது அம்பலமானது. மேலும், இதுபோன்று வேறு யாரும் செய்ய கூடாது என்றும் இளைஞர்கள் குழு பிறருக்கு அறிவுறுத்தியது. சார்தாம் யாத்திரை பயணத்தின்போது பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறை பாதுகாப்பு அம்மாநிலம் முழுவதும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை சார்தாம் யாத்திரையில் விதிகளை மீறி செயல்பட்டதாக ருட்ரபிரயக் மாவட்ட காவல்துறை 25 நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது.