Gwalior Car Accident (Photo Credit : @GwaliorNewsLive X)

ஜூலை 23, மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் கன்வார் யாத்திரை நடந்துகொண்டிருக்கிறது. இதனால் பக்தர்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற கார் பக்தர்களின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய ஒருதலைக்காதல் சைக்கோ.. பதறவைக்கும் வீடியோ.! 

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி சில நொடிகளில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்துகையில், இவர்கள் அனைவரும் அங்குள்ள சிதாவ்னா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை :

மொத்தமாக 13 பேர் குடும்பத்தினராக புனித யாத்திரை சென்றபோது கார் மோதி இவர்கள் பலியானதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கார் விரைவாக வந்தபோது திடீரென டயர் வெடித்த காரணத்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பக்தர்களின் மீது மோது விபத்திற்குள்ளானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவாலியர் கார் விபத்து தொடர்பான வீடியோ :