Doctors Call Off Strike: பெண் மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!
கொல்கத்தாவில் பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆகஸ்ட் 22, டெல்லி (Delhi News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா (Kolkata) நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 09-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை (Doctor Rape And Murder) செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்:
இதனையடுத்து, இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு (CBI) மாற்றப்பட்ட நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றது. இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற வழக்கு விசாரணையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் தாமதமாக எஃப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டது. அதில், சம்மந்தப்பட்ட ஆர். ஜி கார் மருத்துவமனையை சேர்க்காதது குறித்து காவல்துறைக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப நீதிபதிகள் வலியுறுத்தினர். போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போராட்டம் வாபஸ்:
மேலும், பெண் மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் குறிப்புகளை உடனடியாக நீக்க சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஒத்துழைக்குமாறு, ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த தீவிர போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டது.