Woman Stolen Laptops: வங்கிப்பணிக்கு முடக்கு போட்டு, திருட்டுத்தொழிலில் களமிறங்கிய 26 வயது இளம்பெண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
மார்ச் 28, பெங்களூரு (Karnataka News): உத்தர பிரதேசம் மாநிலத்தின் நொய்டா நகரைச் சேர்ந்த ஜெஸ்சி அகர்வால் (வயது 29) என்ற இளம்பெண், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் உள்ள தனியார் வங்கியில் (Ex Bank Woman Employee Arrested) பணிபுரிந்து வந்துள்ளார். பின், வங்கி வேலையை விட்டு விட்டு, அதே நகரில் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்துள்ளார். இந்நிலையில், அருகில் உள்ள மற்ற அறைகளில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் நேரத்தில் அவர்களின் அறைகளுக்குள் சென்று, அவர்களின் அறையில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளார். Thailand Parliament Legalise Same Sex Marriage: புன்னகை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர் திருமணம்.. தாய்லாந்து அரசின் அதிரடி..!
இதனையடுத்து, திருடிய பொருட்களை எல்லாம் அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு சென்று, கள்ளச் சந்தையில் விற்று காசாக்கினார். இவ்வாறு, ஜெஸ்சி மறுபடியும் பெங்களூருக்கு சென்று வேறொரு இடத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். அதே பாணியில், மடிக்கணினி, செல்போன் போன்றவற்றை திருடி விற்றுள்ளார். ஒரு வருடத்திற்குமுன் வங்கி வேலையை விட்டு வந்த ஜெஸ்சி, முழுவதுமாக திருட்டு தொழிலில் இறங்கியுள்ளார். இதில், அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
இதுகுறித்து, காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உத்தர பிரதேச மாநிலத்தின் இளம்பெண் ஜெஸ்சி அகர்வால் என்பது தெரியவந்தது. மேலும், கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்ததில் பல உண்மைகள் தெரியவந்த நிலையில், ஜெஸ்சி அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.