Telangana Assembly Elections 2023: அனல்பறக்கும் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்: மக்களோடு மக்களாக வாக்கு செலுத்திய நடிகர் அல்லு அர்ஜுன்.!

இந்தியாவின் 5 மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல்களில், இறுதியாக இன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன.

Actor Allu Arjun (Photo Credit: @AlluArjun X)

நவம்பர் 30, ஹைதராபாத் (Cinema News): தெலுங்கானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை (Telangana Assembly Elections 2023) தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 106 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 33,655 வாக்குச்சாவடி மையங்களில், இன்று காலை 7 மணிமுதலாகவே வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் மக்களின் பேராதரவை எதிர்கொண்டு காத்திருக்கின்றனர்.

தெலுங்கானாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாரதிய ராஷ்ட்ரிய சமேதி (Bharat Rashtra Samithi) கட்சிக்கும், பாஜக (Telangana BJP), காங்கிரஸ் (Telangana Congress) மற்றும் அதன் ஆதரவு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அம்மாநிலத்தில் பி.ஆர்.எஸ் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை முந்தைய காலங்களில் பெற்றிருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலில் முடிவு என்பது மக்கள் கையில் இருக்கிறது.

இந்த தேர்தல் முடிவுகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 03ம் தேதி வெளியாகிறது. இன்று தேர்தல் முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். டிசம்பர் 03ம் தேதியன்று, முன்னதாக தேர்தல் நடைபெற்று முடிந்த மத்திய பிரதேசம் (Madhya Pradesh), ராஜஸ்தான் (Rajasthan), மிசோரம் (Mizoram) மற்றும் சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும். Chennai Rains: ஒருநாள் மழைக்கே இரவில் ஸ்தம்பித சென்னை: போர்க்கால அடிப்படையில் நடைபெறும் பணிகள்.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்.! 

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி (AIMIM President Asaduddin Owaisi) ஹைதராபாத்தில் தனது வாக்குகளை பதிவு செய்தார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் (Junior N.T. Rama Rao) ஹைதராபாத் பி. ஓபுல் ரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்குகளை பதிவு செய்தார்.

நடிகர் ராம் சரண் (Ram Charan) கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்புக்காக மைசூர் சென்றிருந்த நிலையில், அங்கிருந்து ஹைதராபாத் விரைந்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்குகளை பதிவு செய்தார். இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியும் (S.S Rajamouli) தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசியல்புள்ளிகள், நடிகர் & நடிகைகள், தொழிலதிபர்கள், மக்கள் என பலரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அசாதுதீன் ஓவைஸி வாக்குப்பதிவு செய்தபோது:

நடிகர் அல்லு அர்ஜுன் வாக்குப்பதிவு செய்தபோது:

ராஜமௌலி - ரமா ராஜமௌலி வாக்குச்செலுத்தியபோது: