Chennai Rains 29, 30 Nov 2023 (Photo Credit: @ANI X) 1

நவம்பர் 30, சென்னை (Chennai): தமிழகத்தின் தலைநகர் சென்னையில் (Chennai Rains) நேற்று முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக, நகரின் பிரதான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் கொளத்தூரில் அதிகபட்சமாக 15 செ.மீ, திருவிக நகரில் 13 செ.மீ, அம்பத்தூரில் 14 செ.மீ, அண்ணா நகர் 12 செ.மீ, கோடம்பாக்கம் 10 செ.மீ, மீனம்பாக்கம் 20 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த பேய் மழையின் எதிரொலியால், தற்போது பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் மாநில மற்றும் தேசிய மீட்புப்படை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். சென்னை வந்து சேரவேண்டிய பல்வேறு விமானங்களும், ஓடுபாதையில் தேங்கிய மழைநீரால் மாற்று விமான நிலையங்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டது.

சாலைகளில் தேங்கியுள்ள நீரை போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய பலரும் நடுவழியில் சிக்கிக்கொண்டனர். சென்னையின் பிரதான நகர்களில் வெள்ளம் புகுந்ததால், நகரமே திணறிப்போனது. Jai Shree Ram By Glenn Maxwell: தாய்நாட்டுக்கு புறப்படும் முன், ஜெய்ஸ்ரீராம் என ட்விட் பதிவிட்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்: இதை யாருமே எதிர்பார்க்கவில்லையே..! 

Chennai Rains 29, 30 Nov 2023 (Photo Credit: X)

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் நேற்று இரவு மற்றும் 2500 காவல் துறையினர் அதிரடியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டன. கனமழை காரணமாக இன்று சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் இன்று ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் உட்பட பலரும் களங்களை நேரில் கண்டு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.