Air Pollution Deaths: சென்னை, மும்பை நகரங்களில் காற்று மாசு மரணங்கள் அதிகரிப்பு; ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் பலி.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

காற்று மாசு காரணமாக சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Air Pollution (Photo Credit: Wikipedia)

ஜூலை 05, டெல்லி (Delhi News): நம் நாட்டில் நிலவும் காற்று மாசுபாடு (Air Pollution) குறித்து, அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்குழு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்திய நாட்டைச் சேர்ந்த குழுவினர் இந்த ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அமதாபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி உள்ளிட்ட 10 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. Kuala Lumpur Gas Leak: கோலாலம்பூர் விமான நிலையத்தில் திடீர் ரசாயன கசிவு; 39 பேர் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

இந்த குறிப்பிட்ட 10 நகரங்களில், 2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் சுமார் 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனங்களின் அறிவுறுத்தலின்படி, புற்றுநோய் ஏற்பட காரணமான பிஎம் 2.5 என்ற நுண் துகள்கள், காற்றில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 15 மைக்ரோ கிராம் அளவில் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் 60 மைக்ரோ கிராமுக்கும் அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, டெல்லியில் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளில் 11.5 சதவீதம் ஆகும். டெல்லியில் மட்டும் சராசரியாக 12,000 மரணங்கள் காற்று மாசால் ஏற்படுகின்றன.

அதிக காற்று மாசு இல்லாத நகரங்களாக அறியப்படும் மும்பை, கொல்கத்தா, சென்னையிலும் உயிரிழப்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சென்னை உட்பட நாட்டின் மிகப்பெரிய 10 நகரங்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் 11.5% உயிரிழப்புகள் காற்று மாசால் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இதனால், காற்று மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என, ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.