Operation Sindoor: தமிழன் கங்கையை வெல்வான்.. அமித் ஷா Vs கனிமொழி.. அனல்பறந்த விவாதம்.!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் (Operation Sindoor) குறித்த பதில்களை அளித்த நிலையில், அதற்கு காட்டம் தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஜூலை 29, புது டெல்லி (New Delhi News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததால் பதில் தாக்குதலாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பது போல் செயல்பட்ட பாகிஸ்தான் அரசு, இந்திய எல்லைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள மக்கள் மீது தாக்குதலை முன்னெடுத்தது.
பதிலடி கொடுத்த இந்தியா :
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் தாக்குதல்கள் இந்திய வான்வழி பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய் ஸ்ரீ முகமது உட்பட பல்வேறு பயங்கரவாத நிலைகளை இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தி வந்தது. இதனை அடுத்து போரை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பஹல்காம் விவகாரம் - அமெரிக்க அதிபர் பேச்சு :
இதனிடையே போர் நடந்து முடிந்து மூன்று மாத காலங்களாகியும் இதுவரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் போரை தானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். மேலும் போர் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. O.Panneerselvam: மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிக்கை.!
நாடாளுமன்ற மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் :
தற்போது நாடாளுமன்றத்தில் மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 28 முதல் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் நேற்று பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Minister Rajnath Singh) , "பயங்கரவாதிகளுக்கு அவர்களின் பாணியில் பதில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியா தனது சிறப்பான நடவடிக்கை மூலமாக உலக நாடுகளுக்கு தன்னை நிரூபணம் செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது" என பேசினார்.
ஆபரேஷன் சிந்தூர் அமைச்சர் ஜெய்சங்கர் பதில் (Minister Jaishankar) :
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் அமெரிக்கா போர் நிறுத்தத்தில் ஈடுபட்டதற்கான எந்த விதமான தகவல்களும் உண்மை கிடையாது. பஹல்காம் தாக்குதல் நடந்த பின் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் போனில் கூட பேசிக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு விவாதம் தொடர்ந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்த பதில்களை வழங்கினார்.
ஆபரேஷன் சிந்தூர் அமைச்சர் அமித் ஷா பதில் (Minister Amit Shah) :
அப்போது பேசியவர், "காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த தவறு காரணமாக இந்திய எல்லைப் பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. 80% சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு இதுவரை இந்தியா வழங்கி வருகிறது. எதிர்க்கட்சியினருக்கு தேசப்பற்று என்பது இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பாகிஸ்தான் அரசை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் மீது பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் இதுவரை நடந்துள்ளன. காங்கிரஸ் அரசு மட்டும் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் அரசை காப்பாற்றுவது போல செயல்படுவது ஏன்?" என கேள்வி எழுப்பியிருந்தார். Aadi Thiruvathirai 2025: ஆடித் திருவாதிரை விழா: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை.!
திமுக எம்.பி கனிமொழி காட்டம் (DMK MP Kanimozhi) :
இந்த விஷயத்துக்கு பதிலளித்த திமுக எம்.பி கனிமொழி, "எங்களுக்கும் தேசப்பற்று என்பது இருக்கிறது. உங்களது ஆட்சியில் தான் தவறு நடந்துள்ளது. அது குறித்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டு அது தொடர்பான விவாதத்துக்கு ஒத்துழைக்க மறுப்பது ஏன்? ஆளுங்கட்சி அமைச்சர்கள் நேருவை நினைவில் வைத்திருந்ததற்கு நன்றி. தேசபக்தியில் நாங்கள் குறைந்தவர்கள் இல்லை. பஹல்காம் விஷயத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பேரணியையும் நடத்தி இருந்தார்.
தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு மீது பாசம் :
தாக்குதல் நடைபெறும் வரை உளவுத்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக வெளிநாட்டில் இருக்கும் தலைவர் 25 முறை கூறியிருக்கிறார். அந்த விஷயத்திற்கு இதுவரை மத்திய அரசு உரிய பதில் கொடுக்காதது ஏன்? தமிழ்நாட்டின் சிறப்புகளை பேச விரும்பாத நீங்கள் திடீரென தமிழ்நாட்டுக்கு வந்து அறிவிப்புகளை வெளியிடுவது எப்படிப்பட்டது? தேர்தலுக்கு முன்பு மட்டும் தான் தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் உங்களுக்கு பாசம் வருமா?
கங்கையை வென்ற தமிழன் :
கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெயர் பாஜகவினரிடம் நினைவில் இருக்கட்டும். தமிழன் கங்கையையும் வென்றுள்ளான். இனியும் வெல்வான். நாங்களும் இதே தேசத்துடன் தான் இருக்கிறோம். பஹல்காமில் முடங்கியுள்ள சுற்றுலா நடவடிக்கை காரணமாக அங்கு கடன் வாங்கி முதலீடு செய்துள்ள மக்களின் நிலை என்ன? அதைப் பற்றி எல்லாம் ஆட்சியாளர்கள் சிந்திப்பது இல்லையா? தற்போது தவறு நடந்துவிட்டது. அதனை சரி செய்து எப்படி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது" என பேசினார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)