Heart of Dog: தற்கொலை செய்த உரிமையாளர் வருவார் என வெகுளியாய் காத்திருக்கும் நாய்; கண்கலங்க வைக்கும் சம்பவம்.!
செல்லப்பிராணிகள் நமது உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பவை ஆகும். அவையின் பாசம் எப்போதும் நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.
ஜூலை 18, கோநஸீமா (Ambedkar Konaseema): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோநஸீமா மாவட்டத்தில், கோதாவரி ஆறு செல்கிறது. இங்குள்ள போலவரம் மண்டல் பகுதியில் ஆற்றை கடக்க பாலம் உள்ளது. இந்த பாலம் நகலன்கா பாலம் என அழைக்கப்படுகிறது.
சம்பவத்தன்று பாலத்திற்கு தனது செல்லப்பிராணியான நாயுடன் வருகை தந்த பெண்மணி, தனது செருப்பை கழற்றி நாயை பாலத்தின் நடைபாதையில் இருக்க வைத்துள்ளார். பின் அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது. MS Dhoni Bike Collection Video: தல தோனி வீட்டை அலங்கரிக்கும் அட்டகாசமான பைக்குகள்; அசத்தல் வீடியோ உள்ளே.!
ஆனால், தனது உரிமையாளர் தன்னை அழைத்து செல்ல வருவார் என காத்திருக்கும் நாய், செருப்பை உற்றுப்பார்த்தவாறு சோகத்துடன் அமர்ந்து இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பெண்ணின் விபரங்களை சேகரிக்க முயற்சித்து வருகின்றனர். பெண்ணின் உடலை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.