NIRF Ranking For Best University In India: பல்கலைக்கழகத்திற்கான அகில இந்திய தரவரிசை பட்டியல் வெளியீடு; டாப் 10 ல் வேலூர், கோவை பல்கலைக்கழகங்கள்.!

அடுத்த 2 இடங்களில் ஜேஎன்யு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., இருக்கின்றன.

NIRF Ranking 2023 (Photo Credit: ANI)

ஜூன் 05, புதுடெல்லி (New Delhi): தேசிய தரவரிசை நிறுவன கட்டமைப்பு (National Institutional Ranking Framework) சார்பில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும், Odisha Train Accident: சீரமைப்பு பணிகள் நிறைவு; விபத்து நடந்த பகுதியை கடந்து செல்லும் பயணிகள் இரயில்.. திக்., திக்., தருணங்கள்.!

கொல்கத்தாவில் உள்ள ஜடவ்பூர் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும், வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி ஐந்தாவது இடத்தையும், மணிப்பால் நகரில் அமைந்துள்ள மணிபால் அகாடமி ஆப் ஹையர் எஜிகேசன் ஆறாவது இடத்தையும், கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள அமிர்த விஷ்வா வித்யபீடம் ஏழாவது இடத்திலும்,

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எட்டாவது இடத்திலும், அலிகார் முஸ்லிம் யூனிவர்சிட்டி ஒன்பதாவது இடத்தையும், யுனிவர்சிட்டி ஆஃப் ஹைதராபாத் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.