Bengaluru Stampede (Photo Credit: @_sinha_disha X)

ஜூன் 04, பெங்களூரு (Karnataka News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) நேற்று (ஜூன் 03) நடைபெற்ற இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 18 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி கோப்பையை கைப்பற்றியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான ஆர்சிபி ரசிகர்கள் விரைந்தனர். RCB Fans Died: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்.. கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!

11 பேர் உயிரிழப்பு:

இதனையடுத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை குழந்தைகள், வாலிபர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். போதுமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் இல்லாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என நெட்டிசன்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெங்களூரு கூட்ட நெரிசல்: