Lord Ayyappa: தொடங்குகிறது கார்த்திகை.. ஐயப்பன் கோவில் மாலை அணிவிப்போர் மேற்கொள்ளும் விரத முறைகள் என்ன?..!
கலியுக வரதனாகவும் தெய்வமாகவும் கருதப்படும் ஐயப்பனை 48 நாட்கள் என ஒரு மண்டலம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து இருமுடி ஏந்தி கண்டுவருவதே விசேஷமாக உள்ளது.
டிசம்பர், 10: கார்த்திகை மாதம் தொடங்கினாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலைக்கு (Sabarimala Season) செல்வது வழக்கம். ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்றுவரலாம் என்றாலும், கலியுக வரதனாகவும் தெய்வமாகவும் கருதப்படும் ஐயப்பனை (Lord Ayyapan) 48 நாட்கள் என ஒரு மண்டலம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து இருமுடி ஏந்தி கண்டுவருவதே விசேஷமாக உள்ளது.
இம்மாதத்தில் இருந்து சபரிமலைக்கு கோடான கோடி பக்தர்கள் பயணம் செய்வார்கள். அவ்வாறாக சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் குறித்து இன்று காணலாம்.
ஐயப்பனை தரிசிக்க கம்பியில் கட்டிய மாலையை கட்டாயம் அவர் அணிந்திருக்க வேண்டும். அதேபோல, தங்களின் மனசாட்சி அனுமதி அளித்து மாலை போடாமலும் ஒரு மண்டலம் விரதம் இருந்து புறப்படும் நாளில் மாலை அணிவித்தும் சபரிமலை செல்லலாம்.
அதே போல, கடந்த முறை நாம் பயன்படுத்திய மாலை உறுதியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்த பின்னரே மாலை அணிவிக்க வேண்டும். இல்லையென்றால் முன்கூட்டிய அதனை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். Sony Bravia SmartTv: அதிநவீன அம்சங்களுடன் களமிறங்கி, இந்தியாவில் கலக்கி வரும் சோனி 42 இன்ச் டிவி… சிறப்பம்சங்கள் என்னென்ன?..!
சபரிமலையில் ஐயனை தரிசனம் செய்த பின்னர் வழியில் மாலையை கழற்றிவிடாமல், வீட்டிற்கு திரும்பி மாலையை கழற்றுவது நற்செயலாகும். அதேபோல, மாலையை கோவிலில் கழற்ற இயலாத பட்சத்தில், உங்களின் அம்மாவை கொண்டும் மாலையை கழட்டலாம்.
மாலை போட்டு விரதம் இருக்கும் போது மனைவிக்கு குழந்தை பிறந்தால் அது நற்காரியம் என்பதால், மாலையை கழட்ட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை பிறந்த ஆறு நாட்கள் கழித்து குழந்தையை காணலாம்.
கட்டாயம் பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பட்சத்தில் மாலையை கழட்டிக் கொள்ளலாம் அல்லது அந்த வருடம் மாலையை தவிர்ப்பது நல்லது.
48 நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணம் மேற்கொள்வது சிறப்பானது ஆகும். சபரிமலை பயணத்தில் பெரும்பாலும் காலடியிலேயே செல்ல வேண்டும் என்பதால், உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டு முடிவு எடுப்பது சிறந்தது.
முதல் வருடம் மலைக்குச் செல்லும் சுவாமிமார்கள் கன்னி பூஜை செய்ய வேண்டும். ஆனால், வசதி இல்லாதவர்கள் கட்டாயம் அதனை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. உங்களால் இயன்ற உணவுகளை வீட்டிலேயே செய்து சுவாமிக்கு பூஜை செய்து இல்லாதவருக்கு உணவு அளித்தலே போதுமானது.
விரதம் இருக்கும் நாட்களில் சீயக்காய் தேய்த்து குளிக்கலாம். விரத நேரங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திடீரென அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் மாலையை கழட்டுவது நல்லது அல்லது இருவரும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை.
அதேபோல, விரதம் என்பது பட்டினி கிடந்து தான் இருக்க வேண்டும் என்று எந்த தெய்வத்தாலும் குறிப்பிடப்படுவதில்லை. மூன்று வேலை ஆரோக்கியமான உணவுகளை அளவுடன் சாப்பிட்டு வாழ்வதே அதன் நோக்கம் என்பதால், ஆரோக்கியமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.