Police Help Bird : அந்தரத்தில் சிக்கிய காகத்திற்கு கருணை காண்பித்த காவலர்.. அன்பும், துணிவும் இருந்தால் ஆபத்தும் அல்வா தான்.!
அவற்றை யாரும் கண்டுகொள்வது இல்லை என்பதை நிதர்சனப்படுத்தும் உண்மை தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
டிசம்பர் 2, பெங்களூர்: கர்நாடக மாநிலம், பெங்களூர் மேற்கு இராஜாஜிநகர் (Rajaji Nagar, Bangalore) காவல் நிலையத்தில், போக்குவரத்து காவலர் பிரிவில் பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர் சம்பவத்தன்று தனது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, அங்குள்ள கட்டிடத்தின் அருகே இருக்கும் இராட்சத விளம்பர பலகை கம்பியில், காகம் ஒன்று கயிற்றில் பின்னி கம்பியிடையே சிக்கி பறக்க இயலாமல் அலறித்துடித்துள்ளது.
இதனைக்கண்ட காவலர் சுரேஷ் ஆபத்தான விளம்பர பலகை மீது இலாவகமாக ஏறி, காகம் பின்னப்பட்டு இருந்த கயிற்றை விடுவித்து விடுதலை அளித்தார். இதனால் காகம் அங்கிருந்து பறந்து சென்றது. Snake Byte Death: கண்ணடி வீரியன் பாம்பை பிடித்து வித்தை காண்பித்தவர் பாம்பு கடிபட்டு மரணம்.! மதுபோதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்..!
அவ்வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கும் - இங்குமாக சென்று அவரவர் பணியை பார்த்துக்கொண்டு இருந்தாலும், காவலர் சுரேஷ் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பெங்களூர் மேற்கு காவல் கண்காணிவிப்பாளர் குலதீப் குமார் ஜெயின், இது காவலர்களிடையே இருக்கும் மற்றொரு அன்பு குணம் என பாராட்டி பகிர்ந்துள்ளார்.