Rameswaram Cafe Blast: பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரம்; சந்தேகத்திற்குரிய நபர் கைது.. என்.ஐ.ஏ விசாரணை.!

இவர் தான் குற்றத்தில் ஈடுபட்டாரா? என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rameswaram Cafe Suspect (Photo Credit: @nabilajamal_ X)

மார்ச் 13, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வைட்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே (Rameshwaram Cafe) என்ற தனியாருக்கு சொந்தமான ரெஸ்டாரண்டில், கடந்த வாரம் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. அக்கடைக்கு வந்த மர்ம நபர் ஐஇடி ரக வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். இதனால் உயிர்சேதம் இல்லை எனினும், சிலர் படுகாயமடைந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக பெங்களூர் காவல்துறையினர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். Govt Hospital Inspection: நோயாளி போல் வேடமிட்டு மருத்துவமனைக்குள் ஆய்வு; மருத்துவர், பணியாளர்களின் அலட்சியத்தால் கொந்தளித்த ஐ.ஏ.எஸ்.! 

குற்றவாளிக்கு வலைவீச்சு: கபேக்கு வெடிகுண்டுடன் வருகை தந்த நபரின் சிசிடிவி கேமிரா காட்சிகள் கண்டறியப்பட்டு, அவருக்கு அதிகாரிகள் வலைவீசி வந்த நிலையில், அவர் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கபே கடந்த மார்ச் 09ம் தேதி சீரமைப்பு செய்யப்பட்டு திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு பின்னர் வாடிக்கையாளர்கள் அணு அனுமதிக்கப்பட்டனர். Restaurant Explosion: கியாஸ் கசிவு காரணமாக ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி., பலர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்து விசாரணை: தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பு விவகாரத்தில் தொடர்புடைய நபரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அவர் பயணித்த வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, சிசிடிவி கேமிரா பதிவுகளும் வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய நபர் அம்மாநிலத்தில் உள்ள பல்லாரி பகுதியை சேர்ந்த ஷபீர் என்பவராக இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் தான் இக்குற்றச்செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.