Liquor Smuggling Gang Attacked Cops: கடமையை செய்யச்சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்.. 11 காவலர்கள் காயம்., 4 குற்றவாளிகள் கைது.!

திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்ற கும்பலின் இருப்பிட தகவலை அறிந்து விரைந்த காவல் துறையினர் மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 11 காவலர்கள் காயமடைந்தனர்.

Inspector Chaudhary Surya Bhushan (Photo Credit: ANI)

ஜனவரி 28: பீகார் (Bihar) மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதால், திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்கள் காய்ச்சப்பட்டு, கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க கலால் துறை காவல் துறையினருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பல அதிரடி சோதனைகளை மேற்கொண்டு திருட்டு மது விற்பனையை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பீகாரில் உள்ள ஆரா (Arrah, Bihar) ஜெக்திஷ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட (Jagdishpur Police station) காஹா கிராமத்தில் உள்ள வீட்டில் மதுபானம் (Illegal Liquor Manufacturing) காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் (Police Officers) அதிரடியாக விரைந்தனர்.

காவல் துறையினர் வந்து இறங்கியதை கண்டு அதிர்ந்துபோன கடத்தல் கும்பல் (Liquor Smuggling Gang), அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணி காவலர்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நிகழ்விடத்திற்கு விரைந்த 11 காவலர்கள் காயமடைந்தனர். 3 காவல் வாகனங்கள் உடைக்கப்பட்டன. National Anthem Insulting Accuse Arrested: 74வது குடியரசு தினத்தில், தேசியகீதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் நண்பருடன் கைது..!

இந்த தகவல் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கவே, அவர்கள் கூடுதல் படையை விரைந்து அனுப்பியதை தொடர்ந்து தடியடி நடத்தி கும்பல் ஓடவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சாராயம் காய்ச்சிய இடங்களை தங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த காவல் துறையினர், தப்பி சென்றோரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த ஜனவரி 3ம் தேதி கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற 6 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 28, 2023 04:11 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).