Bipin Rawat Sand Art: மறக்க முடியுமா?.. முப்படைகளின் முதல் தலைமைதளபதி பிபின் ராவத் மறைந்த தினம் இன்று: உருவத்தை அழகுற செதுக்கிய மணல் சிற்பக் கலைஞர்.!
மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத்-க்கு புகழாரம் சேர்க்கும்பொருட்டு, அவரின் நினைவு நாளில் மணல் சிற்பக் கலைஞர் பிபினின் சிற்பத்தை வடித்துள்ளார்.
டிசம்பர் 08, பூரி (Odisha News): இந்தியாவின் இராணுவ தலைமை தளபதியாக பணியாற்றி வந்த பிபின் ராவத், முப்படைகளுக்கான ஒருங்கிணைந்த தலைமை பொறுப்பு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்.
மறக்க முடியாத நாள்: கடந்த 8 டிசம்பர் 2021ம் தேதியன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்ஸ்டன் இராணுவ பயிற்சிப்பள்ளிக்கு ஹெலிகாப்டரில் அவர் தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் வருகை தரவிருந்தார்.
14 பேரும் பலி: இடையில் ஏற்பட்ட திடீர் பனிமூட்டம் காரணமாக, இராணுவ விமானம் குன்னூர் அருகேயுள்ள தேயிலை தோட்டத்தில் விபத்திற்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 அதிகாரிகள் பலியாகினர். இவர்கள் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. Family Members 4 Died by Suicide: பணப்பிரச்சனையால் சோகம்: ஆந்திர தம்பதி, வாரணாசியில் குழந்தைகளுடன் தற்கொலை.. 4 பேரின் சடலம் மீட்பு.!
மணல் சிற்பம்: இந்நிலையில், ஒடிஷா மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தை நினைவுகூரும் பொருட்டு, அங்குள்ள பூரி கடற்கரையில் பிபின் ராவத்தின் உருவத்தை ஒத்த மணல் சிற்பதை வடித்தார். இந்த காணொளி வைரலாகி வருகிறது.
மறைந்த முப்படை தளபதிக்கு புகழாரம்: அவரது எக்ஸ் பதிவில், "துணிச்சலான மண்ணின் மகன், இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி" என தெரிவித்துள்ளார்.