Crypto BitCoin: பிட்காயினின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தது எதனால்?.. உண்மையை அலசினால் காரணம் இது தான்.!
தங்கத்தை போல அரியது என்ற விஷயத்தால் பிட்காயின் தனித்துவத்தோடு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர், 10: தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு பல அற்புதமான விஷயங்களை தந்தாலும், அதில் ஆபத்துகளும் உள்ளன. நாம் தேர்ந்தெடுக்கும் பாதையை பொறுத்து ஒவ்வொரு விஷயமும் நடைபெறுகிறது. இன்றளவில் இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ள விஷயம் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் (Crypto Currency & Bitcoin) தொடர்பான விவாதங்கள் தான்.
நடிகர் & நடிகைகள் கிரிப்டோ கரன்சியை முதலீடு செய்யுங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உட்பட பலரின் சமூக வலைதள கணக்குகள் ஹேக்கிங் செய்யப்பட்டு கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவான பதிவுகள் வெளியிடப்படுகின்றன. பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் இருக்கும் தகவல்கள் என ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரியப்படவைக்கும்.
கிரிப்டோ கரன்சியை பொறுத்தமட்டில் பயனர்கள் வங்கியின் ஊழியர்களை போல செயல்படுகிறார்கள். கடந்த 2007 - 2008ம் ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்க, பலரும் வேலையை இழந்து மிகவும் கஷ்டங்களை சந்தித்தனர். அப்போது, உலகளவில் உள்ள நாடுகள் சர்வதேச அளவில் பொருளாதாரம் தொடர்பாக எடுத்த முயற்சி குறித்து கேள்விகள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையில் அக். 2008ல் சமூக வலைத்தளத்தில் பிட்காயின் தொடர்பான முதல் அறிக்கை சட்டோஷி நாகமோடோ என்பவரால் வெளியிடப்படுகிறது. இவர் எலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை குறித்த தகவலை தெரிவித்து "பிட்காயின்" என்பதை உலகுக்கு அறிமுகம் செய்கிறார். இன்றளவில் பணத்தின் மதிப்பு என்பது அரசு, வங்கியால் அளிக்கப்படுகிறது. பணமும், அதற்கான மதிப்பும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. ஆனால், அதனை செல்லாது என அறிவித்தால் பணமும், அதன் மதிப்பும் காகிதமே. Tamil Movies Part 1 & 2: தமிழில் இரண்டு பாகமாக வெளியாகி மாபெரும் சாதனை படைத்த 5 படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!
நாம் உழைத்து சம்பாதித்து வைத்துள்ள பணத்தின் மதிப்பு இழக்கப்படுகிறது. நமது பணத்தை மூன்றாம் நபரான வங்கி சேமிக்கிறது. அதில் இருக்கும் தொகையை பொறுத்து அரசு வரம்பு வைத்து வரி விதிக்கிறது. இவ்வாறான உரிமைகள் அதிகரித்து செல்லும்போது, சாதாரண மனிதனின் எண்ணம் பிட்காயினை நோக்கி தள்ளப்படுகிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் Double Spending என்ற முறை கையாளப்படுகிறது. அதில், நமது கணக்கில் இல்லாத காசை இருப்பது போல காட்டுவது, பணபரிமாற்ற தகவலை பலருக்கு அனுப்புவது என இருக்கிறது. கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடி போலத்தான் மேற்கூறிய விஷயமும். மோசடியே அதன் முதல் குறி.
இரட்டை தகவல் மோசடியை தவிர்க்கவும், இடைத்தரகரின் தலையீடுகளை களையவும், வங்கிகள் & அரசாங்கம் பணத்தை கட்டுப்படுத்தாமல் இருக்க பிட்காயின் உருவாக்கப்பட்டது. இது டிஜிட்டல் பணம் என்பது தான் அதன் தனித்துவத்தை ஏற்படுத்தியது. உலகளவில் 21 மில்லியன் பிட்காயின் மட்டும் இருக்குமாறு சடோஷி வடிவமைத்ததால், அதன் மதிப்பும் பன்மடங்கு கூடுகிறது. தங்கத்தை போல அரியது என்ற விஷயத்தால் பிட்காயின் தனித்துவத்தோடு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
Note: பிட்காயின் வாங்குவது/விற்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம். முதலீடுகளில் முறைகேடுகளும் இருக்கலாம். முதல் உங்கள் பணம் என்பதால் முழு ரிஸ்கும் உங்கள் பொறுப்பே. கவனத்துடன் இருப்பது எப்போது சாலச்சிறந்தது.