Gujarat Mother Killed Baby Case (Photo Credit: @tv9gujarati X)

ஏப்ரல் 09, மெகந்தி நகர் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள மெகந்திநகரில் வசித்து வரும் 22 வயதுடைய கரிஷிமா பாகல் என்ற பெண், தனது 3 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டு, பின் எதுவும் தெரியாததுபோல் கணவரிடமும், காவல்துறையினரிடமும் நடித்துள்ளார். அதிகாரிகளின் விசாரணையில் உண்மை அம்பலமாகி பெண்மணி இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். Thanjavur Shocker: காவல்நிலையம் முன் பாசப்போராட்டம்.. விஷம் குடித்த விபரீதத்தால் இளம்பெண் பலி..! 

தாயின் அதிர்ச்சி செயல்:

கருவுற்றதில் இருந்து தீவிர உடல்நலக்குறைவை எதிர்கொண்டு இருந்த கரிஷிமா, மனரீதியாகவும்-உடல் ரீதியாகவும் பல துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைப்பேறு நடந்ததால், அவருக்கு விரக்தி மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. பின் எந்த சத்தமும் இல்லை. கணவர் திலீப் பாகலுக்கு தொடர்பு கொண்டவர் குழந்தை மாயமாகிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து உண்மை அம்பலமாகியுள்ளது.

குழந்தையை கொலை செய்த தாயின் காணொளி: