ஏப்ரல் 09, நடுக்காவேரி (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் அய்யா தினேஷ் (வயது 26). இவர் நேற்று அப்பகுதியில் தகராறு செய்தது தொடர்பாக புகார் வந்து, காவல்துறையினர் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது, இளைஞரின் சகோதரிகள் கீர்த்தி (27), மேனகா ஆகியோர் அதிகாரிகளை தடுத்தும் பலனில்லை. பின் காவல் நிலையம் சென்றவர்கள், தம்பிக்காக பாசப்போராட்டம் நடத்தியுள்ளனர். Chennai Shocker: போதைப்பொருள் வாங்கி வரமறுத்த நபர் அடித்துக்கொலை; சென்னையில் பயங்கரம்.!
சிகிச்சை பலனின்றி சோகம்:
இதனிடையே, நடுக்காவேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷர்மிளா, சகோதரிகளை திட்டியதாக தெரியவருகிறது. இதனால் ஆவேசமடைந்த இருவரும் விஷம் வாங்கி வந்து காவல் நிலையம் முன்பு குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் மீட்ட அதிகாரிகள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு கீர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த கீர்த்தியின் உறவினர்கள் கடும் கொந்தளிப்புடன் அங்கு போராட்டம் செய்து வருகின்றனர். தொடர் பதற்ற சூழல் காரணமாக கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. மேனகா தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.