Karnataka MGNREGA Scam (Photo Credit: YouTube)

ஏப்ரல் 09, யாத்கிர் (Karnataka News): இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (Mahatma Gandhi NREGA), மத்திய அரசு கடந்த 2005ஆம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படுவது வழக்கம். இதில், நாள் ஒன்றுக்கு தற்போது, ரூ.370 ரூபாய் வழங்கப்படுகிறது. New Aadhaar App: புதிய ஆதார் செயலி அறிமுகம்.. மத்திய அரசு சூப்பர் அப்டேட்.., முழு விவரம் இதோ..!

100 நாள் வேலையில் மோசடி:

இத்திட்டத்தில், கர்நாடக மாநிலம், யாத்கிர் (Yadgir) மாவட்டத்தில் உள்ள மல்தார் கிராமத்தில் சன்னலிங்கப்பா என்பவரின் பண்ணை அருகில், கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழு படம், அரசின் என்.எம்.எஸ். எனும் தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. புகைப்படத்தில் இருப்பது பெண்கள் இல்லை என்று சந்தேகம் எழுந்தநிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து அதிகாரி சஸ்பெண்ட்:

இந்நிலையில், ஆண்கள் குழுவினர், சேலை அணிந்து தலையை மூடிக்கொண்டு பெண்களை போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பெண் தொழிலாளர்கள், இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என பொய்யாக கணக்கு காட்டி, பண மோசடி செய்வதற்காக இவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.