JP Nadda Casting his Vote: முதல் ஆளாக வாக்களித்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா; வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.!
இந்த திருவிழாவை அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பிக்க வேண்டும். சீர்மிகு இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என ஜேபி நட்டா கூறினார்.
ஜூன் 01, (Himachal Pradesh News): 18 வது இந்திய மக்களவைத் தேர்தல் 2024 (General Elections India 2024) ஏழுகட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஜூன் 01ம் தேதியான இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்னும் 3 நாட்களில் (ஜூன் 04) அன்று ஒரேகட்டமாக (2024 Elections Results) வெளியாகிறது. மத்தியில் ஆட்சிக்கட்டிலில் அமரபோகும் அணியை எதிர்பார்த்து இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய தலைவர்களும் காத்திருக்கின்றனர்.
முதல் ஆளாக வாக்களித்தார் ஜேபி நட்டா: இந்நிலையில், தேர்தலில் தனது வாக்குகளை மனைவி மல்லிகா நாட்டவுடன் சேர்ந்து பதிவு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, வாக்காளர்கள் அனைவரும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "நான் தான் எனது வாக்குப்பதிவு மையத்தில் முதல் ஆளாக வாக்களித்து இருக்கிறேன். Suspected Objects in New Delhi Railway Station: புதுடெல்லி இரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பொருட்கள்; அதிகாரிகள் கூறிய உண்மை.!
தேர்தலுக்காக தயாராகி நான் எனது ஜனநாயக கடமையை முதலில் நிறைவேற்ற ஆசைப்பட்டு, முன்னதாகவே வந்து அதனை செய்துள்ளேன். திறமையான மற்றும் நம்பிக்கையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவை மாற்ற ஒவ்வொரு வாக்காளரும் தங்களின் பங்கை வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் என்பது என்னைப்பொறுத்தமட்டில் ஜனநாயக திருவிழா" என கூறினார்.