Suspected Object in New Delhi Railway Station (Photo Credit: @ANI X)

ஜூன் 01, பகர்கன்ச் (New Delhi): புதுடெல்லி இரயில் நிலையத்தில் உள்ள பகர்கன்ச் பகுதியில், நேற்று இரவு மர்ம வடிவிலான வெடிகுண்டு போன்ற பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை கவனித்த இரயில்வே ஊழியர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, காவல் துறையினர் நேரில் வந்து சோதித்துவிட்டு, சர்ச்சைக்குரிய பொருள் தொடர்பாக ஆய்வு செய்ய இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரையும் உதவிக்கு அழைத்திருந்தனர். India Elections 2024 Phase 7: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள லோக் சபா தேர்தல் 2024: உ.பி முதல்வர் யோகி, பாஜக தேசிய தலைவர் நட்டா வாக்குப்பதிவு.! 

சோதனைக்கு பின் அதிகாரிகள் உறுதி: தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சர்ச்சைக்குரிய மர்ம பொருள் இராணுவ பயிற்சிகளின் போது பயன்படுத்தப்படும் கையெறிகுண்டு மாதிரி. அதனால் எந்த விதமான அச்சமமும் வேண்டாம். ஆபத்துக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, மாதிரி குண்டுகள் இங்கு வந்தது எப்படி? யார் வீசி சென்றனர்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.