Digital India: ஆகஸ்ட் 15-க்குள் கிராம பஞ்சாயத்து பணப்பரிவர்தனைகளை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க உத்தரவு..!

பி.எம்.எப்.எஸ் முறையின் மூலமாக தற்போது வரை 1.5 இலட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Representational Image (File Photo)

ஜூன் 29, புதுடெல்லி (NEWDELHI): மத்திய பஞ்சாயத்து துறை அமைச்சகம் கிராம பஞ்சாயத்துக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்குள் பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக நடக்கும் பணப்பரிவர்தனைகளை டிஜிட்டல் மயமாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் தலைமை செயலர் சுனில் குமார் பி.டி.ஐ (PRESS TRUST OF INDIA) நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியின்படி, கிராம பஞ்சாயத்துகள் 90% இந்தியாவில் டிஜிட்டல் மயமாகிவிட்டது. கிராம பஞ்சாயத்தில் நடைபெறும் பணிகளுக்கான பணம் வழங்குதல் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது.

எஞ்சிய 10% பகுதிகளை கண்டறிந்து, அங்கும் டிஜிட்டல் பணபரிவர்தனையை ஊக்குவிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நிறைவு பெற வேண்டும். கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் தாங்கள் விரும்பும் போன் பே, கூகுள் பே, பாரத் பே, பி.எச்.ஐ.எம்., வாட்சப் பே உட்பட பல செயலிகளை தேர்வு செய்துகொள்ளலாம். திராட்சை பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?… அசத்தல் பட்டியல் இதோ.! 

பி.எம்.எப்.எஸ் முறையின் மூலமாக தற்போது வரை 1.5 இலட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே செக் மற்றும் பணம் கொடுக்கும் வழிமுறைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. பஞ்சாயத்து அதிகாரிகள் ஜூலை 30ல் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதன் வாயிலாக அறிவுறுத்தல் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து உறுப்பினர்களின் UPI பயன்பாடு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அவை கண்காணிக்கப்படும். பெரும்பாலான பஞ்சாயத்துகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டுவிட்டது. எஞ்சியதும் விரைவில் செயலாக்கப்படும்.