Delhi Leela Palace: போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்து மோசடி; டெல்லியில் பகீர் சம்பவம் அம்பலம்..!
சவூதி அரேபிய தொழிலதிபருக்கு நெருங்கியவர் என 5 மாதங்கள் டெல்லியில் தங்கியிருந்தவர் விடுதி அறைக்கான கட்டணம் செலுத்தாத வழக்கில் திருப்பமாக அவரின் ஆவணங்கள் போலியானது என்பது அம்பலமாகியுள்ளது.
ஜனவரி 17, புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான லீலா பேலஸில் (Leela Palace) முகம்மது ஷெரீப் என்பவர் கடந்த ஆகஸ்ட் 2022 முதல் நவம்பர் 20ம் தேதி வரை தங்கியிருந்துள்ளார். அதற்கான பில் தொகையாக ரூ.35 இலட்சம் வந்துள்ளது.
முன்னதாக, அவர் தன்னை சவூதி அரேபியாவில் உள்ள செல்வந்தர் ஷேக் பலாஹ் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Falah Bin Zayed Al Nahyan, Abu Dhabi Royal Family) அவரின் குடும்ப உறவினர் என்றும், தான் பிசின்ஸ் விஷயமாக இந்தியா வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவில் இருக்கும் தனது நிறுவனத்தின் முகவரி, அந்நாட்டு அரசின் அடையாள அட்டைகள் போன்றவற்றையும் லீலா பேலஸ் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அவருக்கு அறை வழங்கியுள்ளனர். Indian Cricketers With Junior NTR: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களோடு ஜூனியர் என்.டி.ஆர் நேரில் சந்திப்பு..!
கிட்டத்தட்ட 5 மாதங்கள் வரையில் அறை எண் 427ல் தங்கியிருந்த முகமது ஷெரீப் (Mohammed Sharif), கடந்த நவம்பர் 20ல் அறையில் இருந்து வெளியேறி இருக்கிறார். ரூ.11 இலட்சம் ரொக்கம் கொடுத்தவர், மீதமுள்ள தொகைக்கு செக் கொடுத்துள்ளார்.
அவர் வெளியேறி சென்றபோது அறையில் இருந்த தங்க பாத்திரங்கள் சிலவற்றையும் எடுத்து சென்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக தற்போது லீலா பேலஸ் அதிகாரிகள் டெல்லி காவல் நிலையத்தில் (Delhi Police) புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் முகம்மது ஷெரீப்பின் ஆவணங்களை சோதித்த போது, அவை அனைத்தும் போலியானவை என்பது அம்பலமானது. இதனால் முகம்மது உண்மையில் யார்? எதற்காக 5 மாதங்கள் அங்கு தங்கியிருந்தார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.