Electricity Safety: மழைக்காலத்தில் மின்சார பொருட்கள் உபயோகத்தில் கவனம்.. என்னென்ன செய்ய வேண்டும்?.. ஆலோசனைகள் இதோ.!
இக்காலங்களில் வீடுகளில் மின்சார உபயோகத்தின் போது எதிர்பாராத விதமாக மின்தாக்குதல்களுக்கும் உள்ளாக நேரிடும்.
டிசம்பர், 11: தமிழ்நாட்டுக்கு அதிகளவு மழைபொழிவை தரும் வடகிழக்கு (North East Monsoon Rain) பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. இக்காலங்களில் வீடுகளில் மின்சார உபயோகத்தின் (Power Usage) போது எதிர்பாராத விதமாக மின்தாக்குதல்களுக்கும் உள்ளாக நேரிடும். இவை பெரும்பாலும் நமது அலட்சியம் அல்லது அறியாமையால் நடக்கும். ஆண்டுதோறும் நாம் எதிர்கொள்ளும் பருவமழைக்காலங்களில் மின் தாக்குதலில் இருந்து எப்படி நம்மை தற்காத்து வைத்துக்கொள்ள வேண்டும் என இனி காணலாம்.
மரக்கிளைகள் (Tree Branches): நமது வீட்டில் அல்லது வீட்டருகே இருக்கும் மின்கம்பிகளை சேர்ந்தாற்போல மரத்தின் கிளைகள் சென்றால், அப்பகுதியின் மின் பராமரிப்பதற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து அதனை அகற்ற கோரிக்கை வைக்க வேண்டும். அவரிடம் கூறிவிட்டு மின்சாரத்தை துண்டித்த பின்னர் பணியாட்கள் வைத்து மரக்கிளைகள் மின்சார கம்பிகளை தொட்டு செல்லாத வண்ணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மின்கம்பியில் வேண்டாம் (Electricity Pole): மின்கம்பிகளுக்கு அருகே பந்தல், ஆடு, மாடு போன்றவற்றை கட்ட வேண்டாம். அதேபோல, வீட்டின் மொட்டை மாடி அருகே மின்கம்பம் சென்றால், அதன் அருகே துணிகளை காயவைக்க முயற்சிக்க வேண்டாம். அவை நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
இடி-மின்னலில் கவனம் (Lightening):
மழை நேரங்களில் இடி, மின்னல் போன்றவை ஏற்பட்டால் உயர்ந்த திறந்த வேலிகள், நீர் நிலைகள் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். மின்னலின் போது மின் சாதனங்களான தொலைக்காட்சி, கம்பியூட்டர், பேன் போன்றவற்றை உபயோகம் செய்ய வேண்டாம். அதனுடைய மின் இணைப்புகளை தனியே துண்டித்து வைக்க வேண்டும். Best Tamil Songs: 2022ல் நினைவில் இருந்து நீங்காத இடம்பெற்ற தமிழ் பாடல்கள் லிஸ்ட்.. உங்களுக்காக இதோ..!
மின்விளக்குகளை ஒளிரவிட்டால் போதுமானது. ஒருவேளை உயர் மின்னழுத்த பிரச்சனை ஏற்பட்டால் மின்விளக்குகள் மட்டும் செயலில் இருந்தால் அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தாது. அதனைப்போல, மின்கம்பிகள் எங்கேனும் அறுந்து இருந்தால், அதுகுறித்து மின்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கைகளை வைக்காதீர்: பழுதாகிய மின்சாதனம், மின் மாற்றிகள், மின் இழுவை கம்பிகள் என எதனையும் மழை நேரங்களில் தொட வேண்டாம். கனகர வாகனங்களையும் மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகள் அருகே நிறுத்தி வைப்பதையும், பொருட்கள் ஏற்றி இறக்குவதையும் தவிர்க்கவும். ஒருவேளை மின் பிரச்சனை காரணமாக தீ பற்றினால், அதனை நீர் ஊற்றி அணைக்க கூடாது. வீட்டில் சுற்றுச்சுவர் பகுதிகளில் மின் அதிர்ச்சியை உணரும் பட்சத்தில், ரப்பர் காலனியை கொண்டு மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு மின்வாரிய துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல, குளியலறை பகுதியில் ஈரம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் ஸ்விட்ச்களை பொறுத்த வேண்டாம். எர்த் கனெக்சன் எப்போதும் தனியே இருக்க வேண்டும். அது நல்லது. ஈரக்கைகளால் எப்போதும் மின் சாதனைகளை இயக்குவது, நிறுத்துவது போன்ற அலட்சிய செயல்கள் எப்போதும் கூடாது.
ஒருநிமிட அலட்சியமும் வேண்டாம்: தற்போது மழைக்காலமாக இருப்பதால் கிராமங்களில் உள்ள மக்கள் உட்பட பலரும் தங்களின் வீடுகளில் வாட்டர் ஹீட்டர் மூலமாக நீரினை சூடேற்றி குளிப்பது நடந்து வருகிறது. வாட்டர் ஹீட்டரை இயங்க வைக்க பிளாஸ்டிக் பாக்கெட்டை உபயோகம் செய்ய வேண்டும். அதனைப்போல, வாட்டர் ஹீட்டர் ஆனில் இருக்கும்போதே நீர் சூடேறிவிட்டதா? என்பதை உறுதி செய்ய தண்ணீருக்குள் கைகளை விட கூடாது. வாட்டர் ஹீட்டர் மின்சாரம் நம் மீது நேரடியாக பாயும் பட்சத்தில் அது உயிருக்கு உலைவைக்கும்.