Restrictions on Water supply: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு; வாரத்தில் 3 நாட்கள் நீர் விநியோகம் ரத்து செய்ய்யப்படுவதாக அறிவிப்பு.!
நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால், நவி மும்பையில் நீர் வழங்கும் சேவையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 17, நவி மும்பை (Mumbai News): இந்தியாவிற்கு பெருமளவு மழைப்பொழிவை வழங்கும் தென்மேற்கு (Southwest Monsoon) பருவமழை, 2024ம் ஆண்டில் மும்பைக்கு (Mumbai Rains) இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து, ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்கியது. இதனால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தானே, நவி மும்பை பகுதிகளில் நல்ல மழையும் பெய்து வந்தது. எனினும், நீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில், தற்போது குடிநீர் வழங்கும் அமைப்புகள் அதன் சேவைகளை திட்டமிட்டு தற்போது வழங்கிய வருகிறது. நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம் மோர்பி அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, வாரத்திற்கு மூன்று முறை மாலை நேரத்தில் தண்ணீர் விநியோகம் செய்ய இயலாது என்று அறிவித்துள்ளது. Robbery Attempt Captured on Dashcam: கேமிராவில் பதிவான வழிப்பறி கொள்ளை முயற்சி; இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் அறிவிப்பு:
அங்குள்ள மோர்பே அணையில் தற்போதைய நிலையில் 40 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால், அடுத்தடுத்த நிலைகளை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்மை காரணமாக நீர் இழப்பு குறைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மாலை நேரத்தில் வாரத்திற்கு மூன்று முறை நீர் இனி விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பின்னர் பழைய முறையில் நீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் குடிநீரை வீணாகாமல் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெங்களூர், டெல்லி பகுதிகள் முன்னதாக கடும் நீர்த்தட்டுப்பாடு பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தது. தற்போது மும்பைக்கும் அதே நிலை ஏற்பட தொடங்கியுள்ளது.