அக்டோபர் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாநிலத்தில் மழை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், அது புயலாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தால் மழை குறைந்துள்ளது. இதனிடையே, அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகும் சாத்தியக்கூறுகள் தென்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Elephant Died in Coimbatore: மின்கம்பத்தால் நேர்ந்த சோகம்.. மின்சாரம் தாக்கி யானை பரிதாப பலி.. கோவையில் துயரம்.!
காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்:
அதன்படி, வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புகள் உள்ளது. இது அடுத்த 72 மணிநேரத்தில் உருவாகும். புயலாக மாறுமா? என்பது குறிக விபரங்கள் பின்வரும் நாட்களில் உறுதி செய்யப்படும். அந்தமான் கடல் பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வலுப்பெறும். பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து ஆராய்ந்து வெளியிடப்படும். தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் பருவமழை வாய்ப்புகள் கூடுதலாக அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.