Airports On High Alert: குரங்கு அம்மை பாதிப்பு; சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!

குரங்கு அம்மை பாதிப்பினால், பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Monkeypox | Airport File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 21, டெல்லி (Delhi News): உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று (Monkeypox) பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு:

உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்த நோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, விமான நிலையங்கள், எல்லைகளில் பயணிகளுக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் டெல்லியில் 3 அரசு மருத்துவமனைகள் தயாராக உள்ளன. குரங்கு அம்மை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மாநில அரசுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து சர்வதேச விமான (International Airports) நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் பணியில் உள்ளனர். School Sexual Abuse: எல்கேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. வெடித்த போராட்டம்..!

இந்தியாவில் தற்போது வரை யாருக்கும் குரங்கு அம்மை (Mpox) தொற்று பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கு அம்மை தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, 116 நாடுகளில் சுமார் 99,176 பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 208 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.