CBSE Class 9 Viral Post On Dating And Relationship: 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் டேட்டிங் தலைப்புகள்.. சிபிஎஸ்இ விளக்கம்..!
சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரிலேசன்ஷிப், கேட்ஃபிஷிங், பேய்கள் குறித்து தலைப்புகள் இருப்பதாக கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
பிப்ரவரி 02, புதுடெல்லி (New Delhi): மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) 9 ஆம் வகுப்பு (Class 9)மாணவர்களுக்கு வேல்யூ எஜூகேஷன் புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டேட்டிங் (Dating), உறவுகள் (Relationship) மற்றும் பேய், கேட்ஃபிஷிங் மற்றும் சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம் பெற்றுதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. Mark Zuckerberg Apologises: தற்கொலை செய்யும் குழந்தைகள்... மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்..!
சிபிஎஸ்இ விளக்கம்: சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "டேட்டிங் மற்றும் உறவுகள் குறித்த ஆட்சேபனைக்குரிய விஷயங்களைக் கொண்ட சிபிஎஸ்இயின் வெளியீடு என்று ஒரு புத்தகம் வைரலாகி வருகிறது. இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அத்தியாயத்தின் உள்ளடக்கங்கள் உண்மையில் ககன் தீப் கவுர் எழுதிய சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான வழிகாட்டி என்ற புத்தகத்தில் இருந்து ஜி.ராம் புக்ஸ்(பி) லிமிடெட் கல்வி வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது. CBSE எந்த ஒரு புத்தகத்தையும் வெளியிடுவதில்லை அல்லது எந்த ஒரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் பரிந்துரைக்கவில்லை." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)