Mark Zuckerberg Apologises (Photo Credit: @StockMKTNew X)

பிப்ரவரி 02, நியூயார்க் (World News): சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்கவே, அமெரிக்காவில் மெட்டா உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப் பதிவானது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க செனட் சபையில் அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் மெட்டா, டிக் டாக், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். Thalapathy Vijay Political Entry: அரசியலில் குதிக்கும் விஜய்.. விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று அறிவிப்பு..!

மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனர்: அப்போது, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான காட்சி ஒளிபரப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி நடவடிக்கை எடுக்க தவறியதற்காக நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது. அச்சமயம் திடீரென பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg), மன்னிப்பு கோரினார். மேலும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில், லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை இணையதளங்கள் மேற்கொள்ள அமெரிக்க செனட் சபை நீதிக்குழு அறிவுறுத்தியது.