NEET PG 2024 Exam Preponed: தேர்தல் எதிரொலி... நீட் தேர்வு தேதியில் மாற்றம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

NEET PG Exam (Photo Credit: @otvnews X)

மார்ச் 21, புதுடெல்லி (New Delhi): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வுக்கான (NEET PG 2024 Exam|) தேதி மாற்றப்பட்டிருக்கிறது. World's Happiest Countries In 2024: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்... முதலிடத்தில் யார்?. நம்ப இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?.!

அதாவது, ஜூலை 7ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு 14 நாட்கள் முன்கூட்டியே (Preponed) , ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. அதேபோல இந்த தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கலந்தாய்வு எனவும் தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. இதனால் மாணவர்கள் தேர்வுக்காக முன்கூட்டியே தயாராகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.