Happy (Photo Credit: Pixabay)

மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): புதன் கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி (World's Happiest Countries) அறிக்கையில் பின்லாந்து (Finland) தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது. மகிழ்ச்சி குறியீட்டில் கடந்த ஆண்டைப் போலவே இந்தியா (India) 126வது இடத்தில் உள்ளது. 2021 இல் தலிபான்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுத்ததில் இருந்து மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில் கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு 16வது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டு 23வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டு, கனடா 15வது இடத்தையும், இங்கிலாந்து 20வது இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும், பிரான்ஸ் 27வது இடத்திலும் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில், ஐக்கிய அரபு அமீரகம் 22வது இடத்திலும், சவுதி அரேபியா 28வது இடத்திலும் உள்ளன. ஆசிய நாடுகளில், சிங்கப்பூர் 30வது இடத்தில் உள்ளது. சீனா 60வது இடத்திலும், நேபாளம் 93வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும், மியான்மர் 118வது இடத்திலும், இலங்கை 128வது இடத்திலும், வங்கதேசம் 129வது இடத்திலும் உள்ளன. 1985 Mahindra MM540 Restoration: படையப்பா நீலாம்பரி மாதிரி நீண்ட நாட்களுக்கு பின்பு வெளிய வந்த மஹிந்திரா எம்எம்540 ஜீப்.. வைரலாகும் வீடியோ..!

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் அறிக்கையில் வயதானவர்களைவிட இளம்வயதினர் அதிகமானோர் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இது பரவலாக உலகம் முழுமைக்குமான போக்காக இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.