Guidelines for Regulation of Coaching Centre: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இல்லை... நீட் பயிற்சி மையத்திற்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி..!
16 வயதிற்குட்பட்ட மாணவர்களை நீட் பயிற்சி மையத்தில் சேர்க்கக்கூடாது என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
ஜனவரி 19, புதுடெல்லி (New Delhi): பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் (NEET) தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். நீட் தேர்வானது மிகவும் கஷ்டமாக இருப்பதன் காரணமாக நிறைய பயிற்சி மையங்கள் உள்ளன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களை பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து மத்திய அரசை தற்போது ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Style Guide: பெண்களுக்கான ஸ்டாக்கின்ஸ்... அதில் இத்தனை வகைகள் உள்ளனவா?.. ஸ்டைலாக இந்த ஆடையை எப்படியெல்லாம் அணியலாம்..!
அதன்படி 16 வயதிற்குட்பட்ட மாணவர்களை பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது, மேலும் பயிற்சி மையங்களில் அதிகமான கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதே தவறை மறுமுறை செய்தால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் மூன்றாவது முறை அதே தவறை செய்தால் பயிற்சி மையமே ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.