ஜனவரி 19, புதுடெல்லி (New Delhi): மேலை நாடுகளில், பள்ளிக்கு செல்வோர் முதல் அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த ஸ்டாக்கின்ஸ் (Stockings) தற்போது இளம் பெண்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டாக்கின்ஸ்கள் பெண்களுக்கு எளிதாகவும், சௌகரியமாகவும் உணர்வதால் இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும் இது இறுக்கமாகவும் அதிக எடை இல்லாமலும் இருக்கும். ஆரம்பத்தில் உள்ளாடையாக இருந்த இது தற்போது நார்மல் டிரஸாக பார்க்கப்படுகிறது. இது ஸ்கர்ட் அணிகையில், அணிந்து கொள்ள வசதியாகவும் அழகாகவும் இருக்கிறது.
ஸ்டாக்கின்ஸ் வகைகள்: ஸ்டாகின்ஸ்கள் கருப்பு, வெள்ளை, தோல் நிறம் போன்ற கலர்களில் கிடைக்கிறது. மேலும் டிரஸ்களுக்கு ஏற்ற நிறங்களிலும், பிரிட்டட், எம்பிராயிடரி டிசைன்களிலும் கிடைக்கிறது. இதில் ஷார்ட், டபுள் லேயர், ஃபிஸ்னெட், ஸ்ட்ரிப்டு போன்ற வகைகளில் கிடைக்கிறது. Ravichandran Ashwin Ram Mandir Invitation: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு..!
பள்ளி குழந்தைகளுக்கு ஏதுவாக: தற்போது பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் ஸ்கர்ட், சர்ட் யுனிஃபாமாக கொடுக்கப்படுகிறது. நீளமான ஸ்கர்டாக இருந்தாலும், சார்ட் ஸ்கர்டாக இருந்தாலும் ஷூக்களுக்கு அணியும் சாக்ஸ்களை முட்டி வரை எடுத்து போட்டுவிடுகிறோம். அதை நாள் முழுவதும் அணியும் போது தோல்களில் இன்ஃபெக்ஷன் ஏற்படுத்தும். மேலும் சதைகளை இறுக்கிப்பிடித்து தசை வலியை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக ஸ்டாகின்ஸை அணிந்து பின் சாக்ஸை பயன்படுத்தி ஷூ போட்டுக் கொள்ளாம்.
பார்ட்டி லுக்: பார்ட்டிகள் அல்லது ஃபங்ஷனிற்கு ஹை ஹீஸ்ஸுடன், ஸ்டாகின்ஸ் அணிந்து ஸ்கர்ட் அணிகையில் பார்க்க ரிச் லுக்கை தரும். மேலும் இது ஒல்லியான தோற்றத்தையும் தரும். அலுவலக மீட்டிங்களுக்கு பென்சில் ஸ்கர்ட் அணிபவர்கள் ஸ்டாகின்ஸைப் பயன்படுத்தையில் ராயல் ப்ரொஃபஷனல் லுக்கைத் தரும். சார்ட் ஸ்கர்ட் அணிகையில், அடர்த்தி அதிகமுள்ள தோல் நிற ஸ்டாக்கின்ஸை அணிந்து கொண்டு பின் அதன்மேல் கருப்பு நிற ஸ்டாகின்ஸ் அணிந்தால் கூடுதல் அழகாக தெரியும். PM Modi Crying Video: மக்களிடம் உரையாற்றும்போது திடீரென கண்கலங்கிய பிரதமர் மோடி.. கோஷமிட்டு ஆறுதல் கூறிய மக்கள்.! நெகிழ்ச்சி செயல்.!
ஸ்டாக்கின்ஸ்களை எப்போது அணியலாம்?: ஸ்டாகின்ஸ்கள் அதன் அடர்த்தியை பொருத்து அவுட்பிட்களுக்கு ஏற்ப பயன்படுத்தலாம். சற்று அடர்த்தி அதிகமானதை பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்றவற்றில் அணியலாம். அடித்தி குறைவான ஸ்டாகின்ஸ்கள் தோலில் நிறத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும் இவைகள் வசதியை தாண்டி கவர்ச்சியாகவும் இருக்கும். இதை பார்ட்டி மற்றும் தங்களுக்கு பிடித்தமானவருடன் இருக்கையில் அணிந்து கொள்ளலாம்.