Travel Advisory: இஸ்ரேல் - ஈரான் போர் சூழல்.. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை..!

மத்திய கிழக்கில் உள்ள ஈரானில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஈரானில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

India Iran Flag (Photo Credit: @IRIMFA_EN X)

அக்டோபர் 02, புதுடெல்லி (New Delhi): மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வந்த பதற்ற சூழலானது, தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியத்தைத் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் போர்தொடுத்து செல்லலாம் எனவும் அஞ்சப்படும் நிலையில், இரண்டு நாடுகளும் போருக்கு ஆயத்தமான தோனியில் செயல்பட்டு வருகின்றன. இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே மூண்ட போர், தற்போது படிப்படியாக இஸ்ரேலின் அண்டை நாடுகளுக்கும் பரவி, போரின் தீவிரத்தன்மை அதிகரித்து இருக்கிறது. Middle East Conflict: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி?.. என்ன செய்யப்போகிறது? இஸ்ரேல்..!

இந்தியர்களுக்கு பயண அறிவுறுத்தல்:

இந்நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கும், ஈரான் செல்ல தயாராக இருக்கும் இந்தியர்களுக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பயண அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கையை வழங்கி இருக்கிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரானில் சமீபத்தில் அதிகரித்து இருக்கும் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்புடன் கண்காணித்து வருகிறது. இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமில்லாத அணைத்து பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஈரானில் வசித்து வரும் இந்தியர்களும் கவனமாக இருக்கவும். தெஹ்ரானில் இருக்கும் தூரத்தகத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்" என கூறப்பட்டுள்ளது.

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தல்: