Iran Strikes Israel (Photo Credit: @seautocure X)

அக்டோபர் 02, ஜெருசலேம் (World News): இஸ்ரேல் (Israel Hamas War) நாட்டின் மீது, பாலஸ்தீனியம் நாட்டைச் சேர்ந்த ஹமாஸ் குழுவினர் தொடங்கிய போர், இன்னும் சில நாட்களில் ஓராண்டை எட்டவுள்ளது. போரின் தொடக்கத்தில் இஸ்ரேலியர்கள் 1400 க்கும் மேற்பட்டோர் தலைகள் துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டாலும், இஸ்ரேல் போருக்குள் களமிறங்கியதும் நிலைமை தலைகீழாக மாறியது. பாலஸ்தீனியம் நாட்டில் உள்ள காசா (Gaza Strike) நகரில் நடந்த தாக்குதலில், தற்போது வரை 41,600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏவுகணைத்தாக்குதல், தரைவழிப்படையின் உதவியுடன் தாக்குதல் என இஸ்ரேல் இராணுவம், அந்நாட்டு அதிபரின் உத்தரவுப்படி காசாவை வேட்டையாடி வருகிறது.

எல்லைதாண்டி வேட்டையாடப்பட்ட ஹமாஸ்:

அவ்வப்போது ஹமாஸ் குழுவினரின் செயல்பாடுகளை முடக்க பள்ளிகள், மருத்துவமனைகள், ஐ.நா பாதுகாப்பு முகாம்களிலும் தாக்குதல் நடத்தப்படுவதால், அந்நாட்டு மக்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து முயற்சித்தாலும், இஸ்ரேலின் விடாப்பிடி குணம் போரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. ஹமாஸ் குழுவை ஒழிக்காமல் இஸ்ரேலும் தனது கொள்கையில் தீர்க்கமாக இருக்கும் நிலையில், லெபனான், ஈரான் (Israel Iran Conflict) போன்ற நாடுகளில் இருந்து தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் எல்லை தாண்டி கொல்லப்படுகின்றனர். Mexico’s First Woman President: மெக்சிகோவின் முதல் பெண் அதிபர்.. கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு..!

அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத இஸ்ரேல்:

இதனால் இஸ்ரேல் - ஈரான் (Israel Iran War Airstrike) இடையே கடுமையான போர் மூளும் சூழல் உண்டான நிலையில், நேற்று (அக்.01) ஈரான் நாட்டின் இராணுவம், இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் நோக்கி கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. இந்த தாக்குதலை முன்கூட்டியே கணித்திருந்த அமெரிக்கா இஸ்ரேல் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தபோதும், தனது நாட்டின் வான்வழி பாதுகாப்பு திறம்பட செயல்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதற்குள் தாக்குதல் நடத்தப்பட்டு முடிந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், அடுத்த தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த ஈரான்:

அதேவேளையில், ஈரானின் எச்சரிக்கை மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு முன்னதாகவே இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, போரின் தீவிரத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், மறக்க முடியாத அளவு பதிலடி வழங்கப்படும் எனவும் கூறி இருந்தார். தற்போது ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவிட்டு நிலையில், இஸ்ரேல் நாட்டை நோக்கி வரும் ஏவுகணைகளை மட்டும் வான்வழிப்பாதுகாப்பு அமைப்பு கொண்டு தகர்க்குமாறு அமெரிக்கா இராணுவத்திற்கு அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்கப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

உலகளவில் பதற்ற சூழல்., வல்லரசுகள் ஆலோசனை:

இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதைப்போல உலகளவில் தோற்றம் உண்டான நிலையில், அமெரிக்க பங்குச்சந்தைகள் போர் அபாயத்தால் கடும் வீழ்ச்சி அடைந்தன. மேலும், கச்சா எண்ணெய் விலையும் பேரல் 74 டாலராக உயர்ந்தது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது நாட்டு மூத்த அதிகாரிகளுடன், போர் கட்டுப்பாட்டு மையத்தில் முக்கிய ஆலோசனையும் நடத்தி இருந்தார். போர்ப்பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், இஸ்ரேல் ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தினால், அது மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணைகள் விழும் காட்சிகள்: