Kite Festival Death: பச்சிளம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை.. குஜராத் பட்டம் விடும் திருவிழாவில் 6 பேர் கழுத்து அறுபட்டு துள்ளத்துடிக்க பலி.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

பட்டம் வாங்க சென்ற சிறுமி, தாயுடன் சென்ற குழந்தை முதல், வேலைக்காக சென்ற இளைஞர் வரை என 3 சிறுமிகள் உட்பட 6 பேர் பட்டத்தின் கயிறு கழுத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Gujarat Kite Festival (Representative image, Photo Credit: Wikimedia Commons)

ஜனவரி 16, அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் மக்களால் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படும் பட்டம் விடும் திருவிழா (Gujarat Kite Festival 2023), நடப்பு ஆண்டிலும் நடைபெற்றது. மக்கள் தங்களது வீட்டின் மாடிகளில் இருந்து பட்டத்தை விட்டு மகிழ்ந்தனர். பட்டம் விடும் திருவிழா சர்வதேச அளவில் புகழ்பெற்ற பண்டிகையில் ஒன்றாகும்.

வதோதரா, வட்நகர், சோம்நாத், ராஜ்கோட், டோலெரா, தொர்டோ ஆகிய நகரங்களில் வானெங்கும் பட்டங்கள் தென்படும். இப்பண்டிகையின் போது பட்டம் விடுவதற்கு சிலர் நைலான் சார்ந்த கூரான கயிறுகளை உபயோகம் செய்கின்றனர். இவையால் சில நேரம் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுகிறது. உயிர்பலியும் (Kite Fesitval Death) நிகழ்கின்றன. NAHI Training Road Safety: சாலை பாதுகாப்பை மேம்படுத்த பொறியியல் நடைமுறை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு.!

நடப்பு ஆண்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 176 பேர் படுகாயம் அடைத்துள்ளனர் என்ற பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் கடந்த 3 நாட்களுக்குள் நடந்துள்ளன என்பது தான் நெஞ்சை பதறவைக்கும் விஷயமாக இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாவ்நகர் (BhavNagar City) பகுதியில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கீர்த்தி (Kirti) என்ற 2 வயது சிறுமியின், கழுத்து நைலான் கயிறுகளில் சிக்கிக்கொள்ள, படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். போர்தளவ் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஸ்நகர் (Visnagar Town) பகுதியில் சனிக்கிழமை தனது தாயுடன் நடந்து சென்றுகொண்டு இருந்த 3 வயது சிறுமி கிஸ்மாட் (Kismat), பட்டத்தின் கயிறு கழுத்தில் அறுத்து சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக விஸ்நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Palamedu Jallikattu Arvind Died: 10வது காளை பிடிக்க தயாராகியவரை துள்ளிக்குதித்து முட்டித்தூக்கிய காளை.. பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்.!

ராஜ்கோட் அலி டேம் (Ali Dam, RajKot ) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் 7 வயது சிறுவன் ரிஷப் வெர்மா (Rishabh Verma) பட்டம் வாங்குவதற்கு சென்றுள்ளான். அப்போது, சிறுவனின் கழுத்தில் கயிறு சிக்கி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஸ்வாமிஜி யாதவ் (வயது 35), நரேந்திர வஃஹேலா (வயது 20), அஸ்வின் காத்வி (வயது 20) ஆகிய 3 பேரும் காந்திதனம் சிட்டி, காந்திநகர் பகுதியில் பட்டத்தின் கயிறால் கழுத்து அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தவிர்த்து மொத்தமாக 176 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 16, 2023 09:10 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now