Assembly Election 2023 Schedule: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் தேர்தல் எப்போது?.. சட்டப்பேரவை ஆயுட்காலம் முடியும் முன் அடுத்த ஆட்சி.. விபரம் இதோ.!

பிற 4 மாவட்டங்களில் ஒரேகட்டமாக வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடைபெறுகின்றன.

Indian Election Commission (Photo Credit: ANI Twitter)

அக்டோபர் 09, புதுடெல்லி (New Delhi): இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இன்று டெல்லியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

அதன்படி, மிசோரம் மாநிலத்தில் நவம்பர் மாதம் ஒரே கட்டமாக 07ம் தேதியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக நவம்பர் 07 மற்றும் 17ம் தேதியும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரே கட்டமாக 17ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. Virat Kohli Most Catches: ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்த விராட் கோலி.! 

இந்த ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஒரே கட்டமாக வெளியிடப்படுகின்றன. அதன்படி, டிசம்பர் மாதம் 03ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. மிசோராமில் 8.52 இலட்சம் வாக்காளர்களும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2.03 கோடி வாக்காளர்களும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 5.6 கோடி வாக்காளர்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5.25 கோடி வாக்காளர்களும், தெலுங்கானாவில் 3.17 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவை காலம் டிசம்பர் 17-னுடன், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை ஜனவரி 03-னுடன், மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவை ஜனவரி 06-னுடன், ராஜஸ்தான் சட்டப்பேரவை ஜனவரி 14-னுடன், தெலுங்கானா சட்டப்பேரவை ஜனவரி 16-னுடன் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை ஆயுட்காலத்தை கணக்கிடும்போது சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் ஒரு மாதம் முன்கூட்டியே தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகிறது.